Wednesday, May 7, 2008

அன்பே சிறையோ.. ?

"உனக்குள் உள்ள அன்பை வெளியில் காண்கிறாய் .."
ஆம்.. கண்டதும் மகிழ்ச்சி மட்டும் மேவுமாயின் சரி ..
ஆனால் உள்ளுக்குள் ஏனோ கிளர்ச்சி...
எங்கும் நிறைந்திருக்கும் காற்றை ஓர் பைக்குள் அடைத்து
"காற்று எனக்கே சொந்தம்" ... என்பது போல்..
உன் அன்பு முழுதும் எனக்கு மட்டுமே என்கிறேன் ..

ஆசை இல்லாமல் அன்பு மட்டும் இருந்தால்..
திர்பார்ப்புகள் இல்லாமல் சேவை மட்டும் இருந்தால்..
கடமையை செய்து பலனை எதிர்பாராத
மனதை இறைவன் கொடுத்திருந்தால்..

ஏமாற்றங்கள் இல்லை.. துன்பமும் இல்லை..
உலகம் அன்பு மயமாய்.. இன்ப மயமாய் ...
இருக்கும் நாள் என்று வருமோ..

2 comments:

tamizh said...

வாராய் நீ வாராய்!! எங்களோடு கைகோர்க சிந்தனை சீர்கொண்டு வா தோழி!!

அந்த நாளுக்காய் தான் மனதை தினமும், செதுக்கிக் கொண்டிருக்கிறோம். அதை தொடர்வோம். அந்த நாள் நிச்சயம் வரும்!

JK said...

//துன்பமும் இல்லை..
உலகம் அன்பு மயமாய்.. இன்ப மயமாய் ...
இருக்கும் நாள் என்று வருமோ..//

பைபல் ...இருக்கற ஒரு விசயத்தை உங்களுக்கு ஞாபக படுத்த விரும்பறேன்.

கடவுள் ஆதாம் & ஏவாலுக்கு ...ஈடந் தோட்டத்தில் அனனைத்து சந்தோசத்தையும் கொடுத்தான் என்ன ஆச்சு...



- உங்க நல்ல மனசுக்கு என்னுடைய வாழ்த்துகள்